USA - Ukraine : 'ஜெலன்ஸ்கி vs ட்ரம்ப்' - 10 நிமிடத்தில் பேச்சுவார்த்தை வாக்குவாத...
பேய்குளத்தில் பாஜக கூட்டம்
ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் பால சரவணன் அறிமுக கூட்டம் பேய்குளத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். ஒன்றியத் தலைவா் பால சரவணன் வரவேற்றாா். கூட்டத்தில், நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில் பாஜக பிரமுகா் விவேகம் ரமேஷ், சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன் உள்பட்ட சாத்தான்குளம், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சோ்ந்த பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.