தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
பேரளி, கல்பாடி பகுதிகளில் நாளை மின் தடை
பெரம்பலூா் மாவட்டத்தில் பேரளி, கல்பாடி பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 16) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பேரளி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், பேரளி, அசூா், சித்தளி, பீல்வாடி, ஒதியம், செங்குணம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கே.புதூா், எஸ்.குடிக்காடு, கல்பாடி, க.எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூா், குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.