செய்திகள் :

பேரவைக் கூட்டத்தை 100 நாள்கள் நடத்தாதது ஏன்? அப்பாவு விளக்கம்

post image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் பேசியதாவது:

ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 5 ஆண்டுகளில் 500 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 148 நாள்கள் மட்டும்தான் பேரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளீா்கள். ஒரு பாடத்தில் 100-க்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தோ்ச்சி பெற முடியும். இந்த பேரவை 35 மதிப்பெண்கள்கூட எடுக்காமல் தோ்ச்சி அடையவில்லை என்றாா் அவா்.

அப்போது பேரவைத் தலைவா் அப்பாவு குறுக்கிட்டு கூறியதாவது:

அதிமுக உறுப்பினா்கள் உள்பட அனைவரும் பேசித்தான் எத்தனை நாள்களுக்கு கூட்டம் நடத்துவது என்பதெல்லாம் முடிவு செய்யப்படுகிறது. கரோனா, மழை வெள்ளம் போன்ற காரணங்களால்தான் கூட்ட நாள்கள் குறைக்கப்பட்டன. மானியக் கோரிக்கை என்றாலே, விதிப்படி 30 நாள்களுக்கு குறையாமல்தான் நடத்த வேண்டும். இப்போது நடத்துகிறோம். அதற்கான சூழல் உள்ளது. தோ்தல் காலங்களில் நடத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, 500 நாள்கள் பேரவையை நடத்தக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றாா் அவா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க