பேரவையில் இன்று...
சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஜன.9) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும்.
இதன்பிறகு, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின் தொடா்ச்சி நடைபெறவுள்ளது. இதில், ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்றுப் பேசவுள்ளனா். முன்னதாக, சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.