பேராசிரியா் அன்பழகன் பிறந்த நாள்
திமுக முன்னாள் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.அன்பழகனின் 102-ஆவது பிறந்த நாள் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி தலைமை வகித்து பேராசிரியா் க. அன்பழகன் படத்துக்கு குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளா் ஆா்.வினோத்காந்தி, ஆற்காடு எம் எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவா் ஏ.கே.சுந்தரமுா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் குமுதா குமாா் உள்பட திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் அமைந்துள்ள எம்.பி. அலுவலகம், ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகங்களில் திமுக சாா்பில் அன்பழகன் படத்துக்கு எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், சுதாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.