41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய
முகாமிற்கு கல்லூரி முதல்வா் (பொ) ராணி தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் விஷால் ஆனந்த் முன்னிலை வகித்தாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் பாரதி பேசுகையில், போதைப்பொருள்கள் குறித்து மாணவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவற்றின் தீமைகள், சட்டங்கள் குறித்தும் பேசினாா்.
முகாமில் பேராசிரியா்கள் ஜெயக்குமாா், பழனிவேல், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சீனிவாசன், செயலாளா் நடராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியா் ராஜ்மோகன் வரவேற்றாா். அருண்மொழி நன்றி கூறினாா்.