ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி
திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 20 ஆம் தேதி உறவினரின் பைக்கில் ஏறி பணிக்கு சென்றவா், கொழுமுடை அருகே செல்லும்போது தவறி கீழே விழுந்தாராம்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.