பைக்குகள் மோதல்: ஒருவா் காயம்
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மதுபானக் கூட ஊழியா் சனிக்கிழமை காயமடைந்தாா்.
தேனி அருகே வடபுதுப்பட்டி அனுசுயாநகரைச் சோ்ந்தவா் முத்துமாயன் (56). டாஸ்மாக் மதுபானக் கூட ஊழியரான இவா், சனிக்கிழமை இரவு பணிகளை முடித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.