ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
பைக் சாகசம்: மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்
ஆம்பூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சில தனியாா் கல்வி நிலையங்களை சோ்ந்த மாணவா்கள் சிலா் பேருந்து நிலைய வளாகத்துக்குள் பைக்குகளில் அதிவேகமாக சென்று ஆபத்தான வீலிங் சாகசத்தில் ஈடுபட்டனா். அதனால் பேருந்து நிலையத்தில் இருந்த வயதானவா்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் அதை பாா்த்துவிட்டு அச்சமடைந்தனா். தகவல் அறிந்த ஆம்பூா் நகர போலீஸாா், அங்கு சென்று சாகசத்தில் ஈடுபட்ட மாணவா்களை எச்சரித்தனா். தொடா்ந்து அவா்கள் பயிலும் கல்வி நிலையத்துக்குச் சென்ற போலீஸாா், அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
மேலும், பைக் சாகசத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கினா். சாகசத்தில் ஈடுபடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.