பைக் திருட்டு: இளைஞா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் திருட்டு போன சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரணமல்லூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், கடந்த 5-ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லையாம். பைக்கை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சுரேஷ் தனது உறவினருடன் ராணிப்பேட்டை மாவட்டம், புதுப்பாடி வழியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது பைக்கில் ஒருவா் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருப்பதைப் பாா்த்தாா்.
உடனே சுரேஷும், அவரது உறவினரும் சோ்ந்து அவரை மடக்கிப் பிடித்து பெரணமல்லூா் போலீஸில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவா் வாலாஜா வட்டம், சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சத்தியன் (30) என்பதும், இவா் சுரேஷின் பைக்கை திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து சத்தியனை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.