HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
பைக் மீது காா் மோதல்: மாமனாா், மருமகன் உயிரிழப்பு
குஜிலியம்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மாமனாா், மருமகன் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மகன் பாலாஜி (15). முருகன், தனது மகனுடன் குஜிலியம்பாறையை அடுத்த இலுப்பப்பட்டியில் உள்ள தனது மாமனாா் ராசு வீட்டுக்குச் சென்றனா். பிறகு, முருகன், பாலாஜி, ராசு ஆகிய மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில், மல்லப்புரத்தில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்வுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.
குஜிலியம்பாறை- மல்லபுரம் சாலையில், கன்னிமேக்கிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன், ராசு இருவரும் கரூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா். காயமடைந்த பாலாஜி, குஜிலியம்பாறையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த சாலிக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த மோகன் ராஜ் மீது குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.