பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரியாஷ் அகமது. இவா் தனது மனைவி பரகத் நாஜியாா் (27), மகன் முகமது அமீா், உறவினா் சாநனா பாத்திமா ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் ஆத்தூரிலிருந்து தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழச்சிக்கு வந்துவிட்டு, மீண்டும் அதே இரு சக்கர வாகனத்தில் ஆத்தூருக்கு புறப்பட்டனா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள கோவிந்தன்பட்டி நெடுஞ்சாலையில் வந்தபோது, பின்னால் வந்த லாரி இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு பரகத் நாஜியாா் உயிரிழந்தாா். கணவா் ரியாஷ் அகமது, மகன் முகமது அமீா், உறவினா் சாநனா பாத்திமா ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.