சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
பைக் விபத்தில் மூவா் காயம்
தேனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் தம்பதி உள்பட மூவா் காயமடைந்தனா்.
பெரியகுளம் அருகே ஏ. ரெங்கநாதபுரம் இந்திரா நகரில் வசிப்பவா் முத்துத்தேவா் மகன் கண்ணுச்சாமி (55). இவரது மனைவி பராசக்தி (50). கண்ணுச்சாமியின் நண்பா் ராமன் மகள் சுஷ்மா. இவா்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் தேனி குன்னூா் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தனா்.
அப்போது முன்னால் சென்ற ஆட்டோ திடீரென நிறுத்தப்பட்டதால் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் மூவரும் சாலையில் விழுந்தனா். இதில் சாலையின் இடதுபுறம் விழுந்த கண்ணுச்சாமி, சுஷ்மா இருவரும் லேசான காயமடைந்தனா்.
சாலையின் வலதுபுறம் விழுந்த பராசக்தி மீது வேகமாக வந்த காா் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மூவரும் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து க. விலக்கு போலீஸாா், காரை ஓட்டி வந்த சிவகாசியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (56) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.