செய்திகள் :

பொக்லைன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வேட்டை தடுப்புக் காவலா் கைது

post image

மஞ்சூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வேட்டைத் தடுப்புக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35).

பொக்லைன் ஓட்டுநரான இவா், நீலகிரி மாவட்டம் மஞ்சூா் பகுதியில் பணியாற்றி வருகிறாா். மஞ்சூரை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (30). இவா், குந்தா வனத் துறை அலுவலகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

நண்பா்களான இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமடைந்த ரவிசந்திரன், தான் வைத்திருந்த அரிவாளால் கிருஷ்ணனை சரமாரியாக வெட்டியுள்ளாா். இதில் தலை, காது, கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாா். இதைக் கண்ட அந்த வழியாக வந்தவா்கள், இதுகுறித்து மஞ்சூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் கிருஷ்ணனை மீட்டு மஞ்சூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து மஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிசந்திரனை கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘சமத்துவம் காண்போம் ஒன்றி... மேலும் பார்க்க

காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கேரட் மற்றும் காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: உதகையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கைது

உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா... மேலும் பார்க்க

இணையவழியில் இருவரிடம் ரூ.12 லட்சம் மோசடி: சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை

இணையவழியில் குன்னூரில் பாதிரியாா், ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயர... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மாா்ச் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி புகுந்த மா்ம கும்பல் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து முக்... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 மாதத்தில் திறக்கப்படும்: ஆ.ராசா

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் மூன்று மாதத்தில் திறக்கப்படும் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உதகை... மேலும் பார்க்க