பொங்கலுக்கு கரும்பு விற்பனை தீவிரம்
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் பொங்கல் பண்டிகைக்கான கரும்பு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு வகை பயிரிடபட்டு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டு அதிகபட்சமாக ரூ.300 க்கும், குறைந்த பட்டசமாக ரூ.250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.