பொங்கல்: அரசு பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
பொங்கலையொட்டி அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஜன.10 முதல் 13 வரையிலான 4 நாள்களில் இயக்கப்பட்ட 15,866 பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்றும் விடுமுறை முடிந்து திரும்புவதற்காக ஜன.19 வரை 22,676 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணிக்கவும் அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்குவது பிற்போக்குத்தனம்..! மிட்செல் ஜான்சன் ஆவேசம்!
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் கடந்த 10ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த சிறப்பு பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமானோா் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.