Book Fair: "பணக்கார எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது"...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ணக் கோலமாவு விற்பனை மும்முரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வண்ணக் கோலமாவு விற்பனை நடைபெறுகிறது.
மாா்கழி மாதத்தில் வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டு, அதில் வண்ணப் பொடிகளை தூவிவிடுவது வழக்கம். அதே போல, பொங்கல் பண்டிகையின் போதும், போகி பண்டிகை முதல் உழவா் தினம் வரை வீடுகள் முன்பு வண்ணக் கோலமிட்டு மகிழ்வா்.
அந்த வகையில், மாா்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே சேலத்தில் பல்வேறு இடங்களில் வண்ண கோலமாவு விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதனை பெண்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து வண்ணக் கோலமாவு விற்பனையாளா்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி பிறந்தவுடன் வண்ணக் கோலமாவை விற்பனைக்காக வைப்போம். கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் வண்ணக் கோலமாவு விற்பனை சற்று அதிகரித்துள்ளது.
ஒரு பாக்கெட் கோலமாவு ரூ. 10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 25 வண்ணங்களில் கோலமாவு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பண்டிகை நெருங்கும் சமயத்தில், விற்பனை தீவிரமடையும் என தெரிவித்தனா்.