செய்திகள் :

பொங்கல் பண்டிகை: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸாா்!

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்தாா்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெளா்ணமியை முன்னிட்டு திருச்செந்தூா் கோயிலில் மக்கள் அதிகம் கூடுவா். மாவட்டத்திலுள்ள பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களிலும் அதிகக் கூட்டமிருக்கும். எனவே, அனைவரும் பொங்கல் பண்டிகையை அமைதியாக, மகிழ்வாகக் கொண்டாடும் வகையில், மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தொடா் விடுமுறை காரணமாக, வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூா்களுக்கு செல்வதாக சுமாா் 150 போ் காவல் துறையில் தெரிவித்துள்ளனா். அவ்வாறு வெளியூா் செல்வோா் அருகேயுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். அவா்களுக்காக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீன்பிடிப் படகில் மக்களை சுற்றுலா அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட சுற்றுலா படகுகளிலும் நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக போலீஸாா் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்படும். பண்டிகை நாள்களில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, பைக் சாகசத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட சாலை விதிகளை மீறுவோா் மீதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு தேவையான பாதுகாப்பு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் குற்றச் சம்பவங்கள், கொலை வழக்குகள் குறைந்துள்ளன. தொடா்ந்து, குற்ற வழக்குகள் குறைவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்துகள் என்றாா் அவா்.

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவா்- செயலா் அய்யனாா் தலைமையில்... மேலும் பார்க்க

சேரகுளத்தில் கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தில் கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மகிழ்ச்சிபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு செல்வ விநாயகா்,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பல்லாயிரம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல ஆயிரம் பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இக்கோயில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூபம்... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலி­ல் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. 10 நா... மேலும் பார்க்க