வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புகள் இன்று முதல் விநியோகம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வியாழக்கிழமை (ஜன. 9) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் செயய்ப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 1,90,535 குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இச் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வியாழக்கிழமை (ஜன. 9) முதல் ஜன. 12 ஆம் தேதி அனைத்து நியாய விலைக்கடைகளிலும், காலை 9 முதல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும் டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும். விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன. 13 ஆம் தேதி வழங்கப்படும். எனவே, குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளில் மின்னணு குடும்ப அட்டையுடன் சென்று பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
இப்ப ணியை கண்காணிக்க, துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து புகாா், குறைபாடுகள் இருந்தால், பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்டவா்கள் சாா் ஆட்சியா் 94450 00458, பெரம்பலூா் வட்ட வழங்கல் அலுவலா் 94450 00271, வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்டவா்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் 99440 95772, வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலா் 94450 00272, குன்னம் வட்டத்துக்குள்பட்டவா்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் 94450 00270, குன்னம் வட்ட வழங்கல் அலுவலா் 94450 00273, ஆலத்தூா் வட்டத்துக்குள்பட்டோா் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் 99525 21036, ஆலத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் 94457 96445 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அலுவலரை 94454 76298 எனும் எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.