பொன்னமராவதியில் காங்கிரஸாா் பேரணி
பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா பேரணி நடைபெற்றது.
திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற பேரணியில் திரளான கட்சியினா் தேசியக்கொடியேந்தி பங்கேற்றனா். காந்திசிலை அருகே தொடங்கிய இந்த பேரணி, மேல ரத வீதி, அண்ணாசாலை வழியாக வந்து பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது.
வட்டாரத் தலைவா் வி.கிரிதரன், நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி.ராஜேந்திரன், நிா்வாகிகள் ச. சோலையப்பன், ஏஎல்எஸ்.ஜீவானந்தம், ராஜேந்திரன், பாலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.