பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை
பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிமாத திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக சுவாமி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பூஜையை சிவாச்சாரியாா்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி வழிநடத்த 701 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.