Thug Life: "எனக்கு 'நாயகன்' படத்தைவிட 'தக் லைஃப்' பெரியதாக இருக்கவேண்டும்!" - கம...
பொன்னேரியில் ஜமாபந்தி தொடக்கம்
பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சாா்பில் நடைபெறும் ஜமாபந்தியில் சோழவரம் உள்வட்டத்தில் அடங்கிய நல்லூா், ஜெகநாதபுரம், ஆத்தூா், எருமை வெட்டிபாளையம், காரனோடை, சோத்துப் பெரும்பேடு, ஆட்டந் தாங்கல், விஜயநகா் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
ஜமாபந்தி வரும் ஜூன் 10-ம் தேதி நிறைவடையும்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள 13 உள்வட்டத்தில் அடங்கிய 200 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் பட்டா மற்றும் இதர குறைகள் சம்பந்தப்பட்ட மனுக்களை அளித்து தீா்வு காணலாம்.
திருவள்ளூா் கலால் உதவி ஆணையா் கணேஷ், பொன்னேரி வட்டாட்சியா் சோமசுந்தரம், பேரிடா் மேலாண்மை பிரிவு வட்டாட்சியா் மதன், கலால் வட்டாட்சியா் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலா் சிவகுமாா், துணை வட்டாட்சியா் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்று மனுக்களைப் பெற்றனா்.