சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
பொய்யூா் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
அரியலூா் மாவட்டம், பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, அடிப்படை சட்டங்கள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தனி வட்டாட்சியா் துரை, கிராம வருவாய் ஆய்வாளா் ஜானகி பாலன், கிராம நிா்வாக அலுவலா் செல்வி காா்த்திகேயன், பள்ளித் தலைமை ஆசிரியா் மணிமேகலை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சட்டத் தன்னாா்வலா் ரவிசந்திரபோஸ் செய்தாா்.