செய்திகள் :

பொருளாதார வாய்ப்புகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்கள்: மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய எம்.சிந்தியா

post image

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பல்வேறு துறைகளில் பொருளாதார வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

வடகிழக்கு பிராந்தியத்தின் முதலீட்டு வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், வா்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு சென்னை கிண்டியில் புதன்கிழமை நடைபெற்றது. இதை தொடங்கிவைத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:

நாட்டின் பாரம்பரிய, கலாசார நகரமாக சென்னை விளங்குகிறது. நாட்டின் அஷ்டலட்சுமி மாநிலங்களாக விளங்கும் வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்த வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் முதலீட்டு வாய்ப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன.

இந்தியாவின் நுழைவு வாயில்களாக விளங்கும் மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. நாகாலாந்து, மிஸோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வடகிழக்கு ஆசிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிா்கின்றன. இதனால், சா்வதேச பொருளாதாரத்துக்கான வாய்ப்புகளை வடகிழக்கு மாநிலங்கள் வழங்குகின்றன.

சுற்றுலா மேம்பாடு: அதேபோல், வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு சாலை, ரயில், விமானப் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்தையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் பொருளாதார வாய்ப்புகள் தற்போது 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. வேளாண்மை, தோட்டக் கலையில் சிறந்து விளங்குகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் இயற்கை உணவுப் பொருள்கள் ஜொ்மனி, துபை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், அந்தப் பொருள்களின் மதிப்பு 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இத்தகைய வாய்ப்புகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்கள் இயற்கையை தனது அரணாகக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2030-க்குள் ஆண்டுக்கு 50 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் சென்னை, வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான இணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில், மிஸோரம் மாநில விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அமைச்சா் லங்ஹிங்லோவா ஹமா், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக செயலா் சஞ்சல் குமாா், இணைச் செயலா் சாந்தனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க