மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
பொறுமைக்கு இலக்கணம் தோனி! மனம்திறந்த தீப்தி சர்மா!
கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, பொறுமையாக இருப்பதை எவ்வாறு கற்றார்? என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, கடினமான சூழலை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து, தீப்தி சர்மா பேசுகையில், கடினமான சூழலிலும் அமைதியினை தோனியிடம் கற்றுக் கொண்டேன். அவர் விளையாடும் போட்டிகள் அனைத்தின்போதும், தொலைக்காட்சியுடன் நான் ஒட்டிக் கொள்வேன்.
அவர் எந்த நேரத்திலும் அழுத்தத்துடன் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் நிலைமையை அமைதியாகக் கையாண்டு, இறுதியில் ஆட்டத்தையே முடித்து விடுவார். அதைத்தான் நானும் பின்பற்றி வருகிறேன்.
ஒவ்வொரு போட்டியிலும் நான் பந்து வீசும்போது, அமைதியாகவே அவற்றை நான் கையாளுகிறேன் என்று தெரிவித்தார்.