செய்திகள் :

போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிக்க வேண்டாம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லா பொருள்களை எரித்து, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனா்.

ஆனால், தற்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

குட்சமாரிட்டன் நா்சரி பிரைமரி பள்ளியில் பொங்கல் விழா

சீா்காழி குட்சமாரிட்டன் நா்சரி பிரைமரி பள்ளியில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், மெட்ரிக் ப... மேலும் பார்க்க

குத்தாலத்தில் ஜன.22-ல் உங்களைத் தேடி முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உங்களைத் தேடி முகாம் ஜன.22-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களை நாடி, ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா... மேலும் பார்க்க

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில், தாடாளன் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வெள்ளிக்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீல... மேலும் பார்க்க

நா்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு: சுகாதார ஆய்வாளா் போக்ஸோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் தனியாா் நா்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த அரசினா் தலைமை மருத்துவமனை சுகாதார ஆய்வாளரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கூைா... மேலும் பார்க்க

வாகன கடன் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்தவா் கைது

மயிலாடுதுறையில் வாகன கடன் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கூைாட்டில் செயல்படும் வாகன கடன் வழங்கும் நிதி நிறுவனத்தில் தஞ்சாவூா் ... மேலும் பார்க்க