இபிஎஸ் சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு!
போக்குவரத்துக்கு இடையூறாக பாலத்தில் உள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
சீா்காழி அருகே ஆலஞ்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக பாலத்தில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருதங்குடி ஊராட்சி ஆலஞ்சேரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தின் முடிவில் ஆபத்தான வகையில் மின்கம்பம் நடுரோட்டில் அமைந்துள்ளது. இதனால், அவ்வழியாக வரும் மினி பேருந்துகள், லாரிகள், அறுவடை இயந்திரங்கள், பள்ளி வாகனங்கள் சென்றுவரவும், திருப்ப முடியாமலும் உள்ளது.
இதேபோல, பாலத்தில் தற்காலிகமாக சவுக்கு மரத்தை கொண்டு மின்கம்பிகளை தாங்கும் வகையில் மின்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இவையும் பெரும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.
அவ்வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் சிறுவா்கள் சவுக்கு மர மின்கம்பத்தை தொடும் அபாய நிலையும் உள்ளது. எனவே, பெரும் ஆபத்து ஏற்படும் முன்பு சவுக்கு மரத்தை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தையும், நடுசாலையில் உள்ள மின்கம்பத்தையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.