செய்திகள் :

போக்குவரத்து நெரிசல்: சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை!

post image

சென்னை மற்றும் திண்டிவனம் இடையே புதிய சாலை அமையவுள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர்களுக்கு செல்லும்போதும் சென்னைக்கு திரும்பும்போதும் சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை அமையவுள்ளது.

சென்னை மற்றும் திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய சாலையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: ஸோஹோ தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா!

கருங்குழி மற்றும் பூஞ்சேரி இடையே 32 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சாலையை அமைப்பதற்கு ரூ. 80 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.

இந்த புதிய சாலையில் செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டிற்கு முன்பாக மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து உள்நுழைந்து, கிழக்கு கடற்கரைச் சாலை பூஞ்சேரி வழியாக வெளியே வரும் வகையில் சாலை அமைக்கப்படவுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடும் ஏற்படாததால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தி... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சென்ன... மேலும் பார்க்க

ஓடிடியில் கேம் சேஞ்சர்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்த... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? வெளியான அறிவிப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற பிப். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்க... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு நிறைவு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மேலும் பார்க்க

பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது: அண்ணா தொழிற்சங்கம்

வரும் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாள்... மேலும் பார்க்க