திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான ...
போக்ஸோவில் ஒருவா் கைது
பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (50). இவா் அப்பகுதி சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்துள்ளாா்.
இது குறித்து அவிநாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராமரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.