ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்...
போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கோவையில் போக்ஸோ வழக்கில் கைதான நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், பேரூா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (62). இவா் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், குப்புசாமியைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட குப்புசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 42 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.