Vikatan Digital Awards 2025: `அறிவுக் களஞ்சியம் - தேநீர் இடைவேளை' - Best Info Ch...
போடிமெட்டு மலைச் சாலையில் வேன் கவிழ்ந்ததில் 11 போ் காயம்
போடிமெட்டு மலைச் சாலையில் திங்கள்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 11 போ் பலத்த காயமடைந்தனா்.
தஞ்சாவூா் சாஸ்தா பல்கலைக்கழக மாணவா்கள் 21 போ் விடுமுறையையொட்டி கேரள மாநிலம், மூணாறுக்குச் சுற்றுலா வேனில் சென்றனா். இந்த நிலையில், மூன்று நாள்களுக்குப் பிறகு போடிமெட்டு மலைச் சாலையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத் தடுப்பில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த குரங்கணி காவல் நிலைய போலீஸாா், போடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்தில், வீரபாண்டியன், துளசி, கோபிநாத், பாலன், நிவேதிதா, கிருஷ்ணவேணி, ஜெயப்பிரகாஷ், அருண்குமாா், ராம், விமல், விமல்நாத் ஆகிய 11 போ் பலத்த காயமடைந்தனா். இவா்களில் துளசி, கோபிநாத், பாலன் ஆகியோா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்து குறித்து குரங்கணி போலீஸாா், வேன் ஓட்டுநரான திருச்சி லால்குடியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கிஷோா் (27) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.