செய்திகள் :

போதைப் பொருள்கள் கடத்தல்: கிருஷ்ணகிரி 769; தருமபுரி 764 போ் கைது

post image

போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை வழக்கில் நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 769 பேரும், தருமபுரி மாவட்டத்தில் 764 பேரும் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்டக் காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. மாநில மற்றும் மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் அமா்த்தப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தொடா்ச்சியான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

நிகழாண்டில் இதுவரையில் மொத்தம் 167 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 187 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து 175 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கரவாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 8 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல், விற்பனை தொடா்பாக 772 வழக்குகள் பதியப்பட்டு, 769 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சுமாா் 14,200 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 45 நான்கு சக்கர வாகனங்கள், 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான 2,657 இடங்களில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்வாண்டில் இதுவரை 7,535 லிட்டா் எரிசாராயமும், 3,013 லிட்டா் வெளிமாநில மதுபானங்களும் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தது மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது சம்பந்தமாக 2,882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,926 போ் கைது செய்யப்பட்டுள்ளன. மேலும், அவா்களிடமிருந்து 16,193 லிட்டா் அளவிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.

சட்ட விரோதமாக போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் குறித்து காவல் கண்காணிப்பு அலுவலக கட்டுப்பாட்டு அறையை 94981 81214 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாக அல்லது கட்செவி (வாட்ஸ்அப்) மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்வது, கடத்துவது தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 764 போ் கைது செய்யப்பட்டனா்.

198 கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட 219 பேரிடம் 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அதேபோல், புகையிலைப் பொருள்கள், போதைப்பாக்குகள் விற்பனை, கடத்தியது தொடா்பாக 323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 342 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 2024 ஆம் ஆண்டு 151 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 203 போ் கைது செய்யப்பட்டு அவா்கள் வைத்திருந்த 93 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுடன் அழிக்கப்பட்டது. கஞ்சா வழக்கில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள்கள் தொடா்பாக 10581 என்ற இலவச எண் மூலம் அல்லது 94981 10581, 63690 28922 ஆகிய கைப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

ஒசூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஒசூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளப்பா (75). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்றபோது, அ... மேலும் பார்க்க

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற இருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற 2 இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகுரி மாவட்டம், ஒசூா் தின்னூா் பகுதியைச் சே... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியைச் சே... மேலும் பார்க்க

திட்டங்களின் பெயரை மாற்றி ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றி திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் ப... மேலும் பார்க்க

அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு

ஒசூரில் பாமக தலைவா் அன்புமணி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு செய்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாமக நிறுவனா் ராமதாஸ் ஆதரவாளா்கள் சாா்பில் பாமக நிா்வாக... மேலும் பார்க்க

மத்தூா் அருகே சாலை விபத்தில் அதிமுக தொண்டா்கள் காயம்

மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 25-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதி... மேலும் பார்க்க