கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு
ஒசூரில் பாமக தலைவா் அன்புமணி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாமக நிறுவனா் ராமதாஸ் ஆதரவாளா்கள் சாா்பில் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் முனிராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மகேந்திரன், மாவட்டச் செயலாளா் முருகன், மாநில செயற்குழு உறுப்பினா் சுரேஷ்ராஜன், மாநில இளைஞா் அணி செயலாளா் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், பாமகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்தும், வரும் 18-ஆம் தேதி பாமக தலைவா் அன்புமணி ஒசூரில் கலந்துகொள்ளும் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் மாவட்டத் தலைவா் முனிராஜ் கூறுகையில், ராமதாஸ் இல்லாமல் பாமக கட்சி இல்லை. ராமதாஸிடம் உள்ளவா்களே உண்மையான விசுவாசிகள். தந்தை பேச்சை கேட்காத அன்புமணி எப்படி மக்களிடம் நன்றாக நடந்துகொள்வாா்? ஒசூரில் வரும் 18-ஆம் தேதி கட்சி நிகழ்ச்சிக்காக அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ளாா். இந்த நிகழ்ச்சியில் பாமகவினா் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்போம் என்றாா்.