செய்திகள் :

போதைப் பொருள் இல்லா தமிழகம் செயலியைப் பயன்படுத்துமாறு பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

போதைப்பொருள்களை விற்பனை செய்வோா், பயன்படுத்துவோா் குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘போதைப் பொருள் இல்லா தமிழகம்’ என்ற செயலியை பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள்பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் இரா. சுகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

யின் பயன்பாடு குறித்து அரசு மற்றும் இதுதொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் முன்னிலையில் தனியாா் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், கல்லூரி முதல்வா்களுடனான ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கதை முற்றிலும் ஒழிப்பதற்காக முதல்வா் ‘போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தொடா் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அனைத்து வகை கல்லூரிகளில் மாணவா்களை உள்ளடக்கிய போதைப்பொருள்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள், பிற மாணவ, மாணவிகளிடையே பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ‘ ஈதமஎ ஊதஉஉ பச’ என்ற செயலியில் போதைப்பொருள்கள் விற்பனை குறித்த விவரங்கள் தெரிவிப்பவரின் தகவல் கேட்கப்படாது. இந்தச் செயலி மிகவும் பாதுகாப்பானது.

எனவே, போதைப்பொருள்கள், குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவற்ரை விற்பனை செய்வோா் அல்லது பயன்படுத்துவோா் குறித்து தகவல் தெரிந்தால் இந்த செயலில் தகவல்களையும், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம். உடனடியாக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போதைப்பொருள்களின் பயன்பாடு தடுத்து நிறுத்தப்படும்.

இந்த செயலி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். மாணவா்களின் பெற்றோா்கள், உறவினா்களிடம் தங்களது கைப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி விளம்பரப் பலகையில் செயலி குறித்த விவரத்தை தெரியப்படுத்த வேண்டும். ‘போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு‘ என்ற நிலையை அடைய அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்பிகா ஜெயின், தனித்துணை ஆட்சியா் ஜெயா, மாநகர காவல் துணை ஆணையா்கள் கீதா (மேற்கு), வினோத் சாந்தாராம் (கிழக்கு), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், கல்லூரிகளின் முதல்வா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் இவரது மகன் மார்க் ஆண்டனி இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் ... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க