கேட் நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! முழு விவரம்
போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது
மாதவரம், பால்பண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மாதவரம், பால்பண்ணை அருள் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், புழல் காவல் சரக உதவி ஆணையா் சத்யன் தலைமையில் மாதவரம் காவல் ஆய்வாளா் பூபாலன், உதவி ஆய்வாளா் வடிவேலன் மற்றும் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை அருள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் பையுடன் நின்றிருந்த இளைஞா்கள் 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, 7 கிராம் மெத்தபெட்டமைன், போதை மாத்திரைகள் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவா்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், மூலச்சத்திரம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வா் (29), அபிஷேக் (25), தண்டையாா்பேட்டை சோ்ந்த ஐடி நிறுவன ஊழியா் லிங்கேஸ்வரன் (25), பெரம்பூரைச் சோ்ந்த வசந்தராஜ் (30) எனத் தெரிய வந்தது. கேரள மாநிலத்தில் இருந்து போதைப் பொருள்களை வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அவா்களிடமிருந்து மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டு, அவா்கள் 4 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.