சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
போர் நிறுத்தத்துக்குப் பாகிஸ்தான் ஒப்புதல்: துணைப் பிரதமர்
இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.
எல்லையில் இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மே 7ஆம் தொடங்கிய போர்ப் பதற்றம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் கூறுகையில்,
உடனடியாக போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும்-பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் தனது இறையாண்மை, ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல் அமைதிக்காகப் பாடுபடுகிறது என்று அவர் தெரிவித்தார்