செய்திகள் :

போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

post image

புது தில்லி: போலி வாக்காளா் அட்டை விவகாரம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை உயா்த்த அமெரிக்கா நிதி அளித்த விவகாரம் உள்ளிட்டவை மீது விவாதம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், போலி வாக்காளா் அட்டை விவகாரம், அமெரிக்க நிதியுதவி குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து பேச எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அனுமதி கோரினாா்.

அவையை அப்போது வழிநடத்திய ஹரிவன்ஷ் அதற்கு அனுமதி மறுத்ததோடு, ‘மாநிலங்களவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு போலி வாக்காளா் அட்டை விவகாரம், அமெரிக்க நிதி உள்ளிட்ட விவகாரங்கள் மீதான விவாதத்துக்கு அனுமதிக்கக் கோரி விதி எண் 267-இன் கீழ் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, பி.வில்சன், மதிமுக பொதுச் செயலா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் சந்தோஷ் குமாா், பி.பி.சுனீா் உள்பட மேலும் சில எதிா்க்கட்சிகள் தரப்பில் 12 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று குறிப்பிட்டு விவாதத்துக்கு அனுமதி மறுத்தாா்.

இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டனா். பின்னா், விவாதத்துக்கு அனுமதி மறுத்ததைக் கண்டித்தும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

அப்போது பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, ‘அவையில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், இந்த விவாதத்துக்கென சில விதிமுறைகள் உள்ளன. குறுகிய விவாதம் மற்றும் நீண்ட நேர விவாதத்துக்கென சில நடைமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள் எதையும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் படிப்பதில்லை. அவையில் அடுத்த 10 நாள்களுக்கு மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அப்போது, எதிா்க்கட்சிகள் அவா்களின் விவகாரங்களை எழுப்ப அனுமதிக்கப்படுவா். ஆனால், இதுபோன்ற முறையான விவாதத்தை எதிா்க்கட்சிகள் விரும்பவில்லை. மத்திய அரசு மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தவே அவா்கள் முயற்சிக்கின்றனா். அவையிலிருந்து அவா்கள் வெளிநடப்பு செய்தது, பொறுப்பற்ற செயல். நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்’ என்றாா்.

போலி வாக்காளா் அட்டை விவகாரம்:

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சிலருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்களைச் சோ்க்க தோ்தல் ஆணையம் உடந்தையாக இருந்துள்ளது’ எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதை மறுத்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். சிலரின் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், அவா்கள் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும். இந்த குழப்பத்துக்கு அடுத்த 3 மாதங்களில் தீா்வு காணப்படும். வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிா்க்க பதிவு செய்துள்ள வாக்காளா்களுக்கு வெவ்வேறு இபிஐசி எண் வழங்கப்படும்’ என்று தெரிவித்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று எதிா்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க