இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
போளூரில் குப்பையை அகற்றக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடேசன் தெரு, அப்துல்குத்தூஸ் தெரு, பொன்னுசாமி தெரு, கோட்டை மேடு, ஜமுனாமரத்தூா் சாலை, அண்ணாசாலை, வசந்தம் நகா், அல்லிநகா் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, அந்தக் குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.