காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளம்... ஒலிவியா ஸ்மித் சாதனை!
மகளிர் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக ஒரு வீராங்கனையை ஒரு மில்லியன் யூரோவிற்கு வாங்கியுள்ளார்கள்.
கனடாவைச் சேர்ந்த ஒலிவியா ஸ்மித் (20 வயது) லிவர்பூல் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ஆர்செனல் கால்பந்து அணி ஒரு மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளது.
இந்திய மதிப்பில் ரூ.11.60 கோடி மதிப்புக்கு ஆர்செனல் அணி ஒலிவியா ஸ்மித்தை வாங்கியிருக்கிறது.
20 வுமன்ஸ் சூப்பர் லீக் தொடரில் அறிமுகமானபோது ஒலிவியா ஸ்மித் 7 கோல்கள் அடித்தார்.
20 வயதான இளம் வீராங்கனை ஃபார்வேடாக லிவர்பூல் அணியில் விளையாடுகிறார். இவர் விங்கராகவும் சென்டர் ஸ்டிரைக்கராகவும் விளையாடக் கூடியவர்.
ஸ்போர்டிங் லிஸ்பென் அணியிலிருந்த ஒலிவியா ஸ்மித் கடந்த ஜூலை 2024-இல் லிவர்பூல் அணியில் சேரும்போதே 2 லட்சம் யூரோ சம்பளத்திற்கு சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரியில் அமெரிக்க வீராங்கனை நவோமி கிர்மா 1.1 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.9.45 கோடி) வாங்கியதே மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளமாக இருந்து வந்தது. தற்போது, ஒலிவியா ஸ்மித் இதனை முறியடித்துள்ளார்.
மகளிர் சாம்பியன்ஸ் லீக்கை வென்ற ஆர்செனல் மேலும் அணியை வலுப்படுத்த இவ்வளவு தொகையைச் செலவிட்டுள்ளது.