மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா நிதான ஆட்டம்!
கொழும்பு: இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று(ஏப். 29) தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவை முதலில் பந்துவீச பணித்தது.
அதனைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை சேர்த்துள்ளது.
முன்னதாக, கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.