செய்திகள் :

மகாராஷ்டிரா: வேறொரு பெண்ணை மணக்க கர்ப்பிணி காதலி எதிர்ப்பு; காதலன் கொடூரச் செயல்; என்ன நடந்தது?

post image

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். திடீரென மாயாகர் காணாமல் போய்விட்டார்.

அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிவிட்டு இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். கடைசியாக தனது தோழியைப் பார்க்கச் செல்வதாக பெற்றோரிடம் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு வார விசாரணைக்குப் பிறகு மாயாகரின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது அந்த போன் புனே அருகில் உள்ள கண்டாலா என்ற மலைப்பகுதியில் இருப்பதாகக் காட்டியது.

கொலை
கொலை

உடனே போலீஸார் அங்குச் சென்று அப்போனை வைத்திருந்த துர்வாஸ் தர்சனைப் பிடித்து விசாரித்தனர். தீவிர விசாரணையில் மாயாகரைக் கொலை செய்து பள்ளத்தில் தூக்கிப்போட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

போலீஸார் உடனே அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரித்தபோது, துர்வாஸ் தனது காதலியைக் கைவிட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்யத் திட்டமிட்டு இருந்தது மாயாகருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என்று மாயாகர் நிர்ப்பந்தம் செய்துள்ளார்.

இதனால் தனது நண்பர்கள் இரண்டு பேரின் துணையோடு மாயாகரை கண்டாலாவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப்போட்டது தெரிய வந்தது. இதையடுத்து மாயாகர் உடல் போடப்பட்ட இடத்தில் தேடி அவரது உடலைக் கண்டுபிடித்தனர்.

இக்கொலையில் துர்வாஸிற்கு உதவியை அவரது இரண்டு நண்பர்கள் விஷ்வாஸ் பவார், சுஷாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மாயாகர் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்யும்படி நிர்ப்பந்தம் செய்துள்ளார். எனவே தர்சன் தனது காதலியை கண்டாலாவிற்கு வரவைத்து கொலை செய்துள்ளார். தர்சன் கண்டாலாவில் பீர் பார் மற்றும் ஒயின் ஷாப் நடத்தி வந்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ

பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவிய... மேலும் பார்க்க