செய்திகள் :

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

post image

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மும்பையிலும் நேற்று முன் தினம் பெய்த திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் சாவந்த்வாடி, மால்வான் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்து இருக்கிறது.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஏராளமான மரங்கள் ஒடிந்து விழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெய்த கனமழையால் இடி தாக்கியும், மரங்கள் விழுந்தும், தண்ணீரில் மூழ்கியும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

திங்கள் கிழமை இடிதாக்கி 5 பேரும், தண்ணீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட விலங்குகளும் இந்த மழையால் உயிரிழந்துள்ளன.

இரண்டாவது நாளில் மழைக்கு மேலும் 14 பேர் உயிரிழந்தனர். நேற்று காலையில் இருந்து மாலை வரை மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் 100 மிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

மும்பையில் 27 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் கூடிய மழை பெய்தது. ரத்னகிரி, புனே, பீட் மாவட்டத்தில் மழை மற்றும் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

தேவேந்திர பட்னாவிஸ்

புனே, கோலாப்பூர், சதாராவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 24-ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே மழை ஆரம்பித்து இருப்பதால் மும்பையில் நடந்து வரும் சாலை கட்டுமானப்பணிகளை உடனே நிறுத்தும்படி மும்பை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆசிஷ் ஷெலார் கேட்டுக்கொண்டுள்ளார்.

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க

"என்னை இடமாற்றம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார்" - வேதனையைக் கொட்டிய ஹைகோர்ட் நீதிபதி

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்க... மேலும் பார்க்க

Booker Prize: சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்த கன்னட எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' என்ற சிறுகதை தொகுப்புகள... மேலும் பார்க்க

`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்

மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட... மேலும் பார்க்க

Hindi: "இந்தியாவில் இந்தியில்தான் பேசுவேன்" - வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்த வங்கி அதிகாரி

வங்கிகளில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியில் பேசும்போது வாடிக்கையாளர்கள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிரா வங்கிகளில் இந்தியில் பேசிய வங்கி அதிகாரியை நவநிர்மாண் சேனா... மேலும் பார்க்க