செய்திகள் :

மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

post image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது.

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.

பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர்.

இதையும் படிக்க: எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 2.33 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினர்.

மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய மேலும் 2 சிறப்பு நாள்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. 45 நாள்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் முடிவடையும்.

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் நீராடிய பூடான் அரசர்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடினார்.பூடான் நாட்டிலிருந்து லக்னெள விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை... மேலும் பார்க்க

ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் ம... மேலும் பார்க்க

தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!

மத்தியப் பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கில் ஏற்பட்ட மோதலில் அவரது உடலை மூத்த மகன் இரண்டாக பிரிக்கக் கோரிக்கை விடுத்தார்.திகம்காரின் லிதோராட்டால் கிராமத்தைச் சேர்ந்த தயானி சிங... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: புதிய பாடல் அறிவிப்பு!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் புதிய பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம... மேலும் பார்க்க

காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும்: முதல்வர்

காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை... மேலும் பார்க்க