செய்திகள் :

மகா கும்பமேளா: `50 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்' -இஸ்கானுடன் இணைந்து செய்யும் அதானி குழுமம்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முடிவடைகிறது. இக்கும்பமேளாவிற்காக நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக மாநில அரசு ஆயிரக்கணக்கான தற்காலிக குடில்களை கட்டி வருகிறது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட இருக்கிறது.

ஆன்மிக இயக்கமான இஸ்கான் அமைப்பு, கும்பமேளா நடைபெறும் இடத்தில் இரண்டு ராட்சத சமையல் அறைகளை ஏற்படுத்தி பக்தர்களுக்கு உணவு சமைத்து வழங்க இருக்கிறது. இஸ்கான் அமைப்பின் இந்த சேவையில் தொழிலதிபர் கெளதம் அதானி, தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இதற்காக அதானி இஸ்கான் அமைப்பின் தலைவர் குருபிரசாத் சுவாமியை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பிற்கு பிறகு நிருபர்களை சந்தித்த அதானி, கும்பமேளா நடைபெறும் இடம் சேவை செய்வதற்கு புனிதமான இடம். அங்கு ஒவ்வொருவரும் கடவுளுக்கு சேவை செய்வதாக நினைத்து தங்களை சேவையில் ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

இஸ்கான் அமைப்புடன் இணைந்து மகா கும்பமேளா பக்தர்களுக்கு 'மகாபிரசாத சேவை' தொடங்குவது எனது அதிர்ஷ்டம். தாய் அன்னபூர்ணியின் ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் இலவச உணவு விநியோகம் செய்யப்படும். இன்று குரு பிரசாத் சுவாமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சேவைக்கான அர்ப்பணிப்பின் சக்தியை நான் ஆழமாக உணர்ந்தேன். உண்மையில் சேவை என்பது தேசபக்தியின் மிக உயர்ந்த வடிவம். சேவை என்பது தியானம், சேவையே பிரார்த்தனை, சேவையே கடவுள்'' என்று தெரிவித்தார்.

குரு பிரசாத் சுவாமியும் அதானியின் சேவையை வெகுவாக புகழ்ந்தார். கும்பமேளா ஏற்பாடுகளை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார். அதோடு கும்பமேளாவையொட்டி பிரக்ராஜில் அமைச்சரை கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Live : Srirangam Ranganatha Swamy Temple Vaikunda Ekadasi Utsav | பரமபத வாசல் திறப்பு |

108 திவ்ய தேசங்களில் முதன்மையான உலகப் புகழ்பெற்ற ஶ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் பகல்பத்து ராப்பத்து உற்சவத்தில் இன்று பரமபத வாசல் திறப்பு வைபவம். மேலும் பார்க்க

திருநெல்வேலி: `பொங்கலோ பொங்கல்' - தயாராகும் மண்பானைகள், மண்அடுப்புகள் |Photo Album

திருநெல்வேலி: பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் பொங்கல் மண்பானைகள்.! மேலும் பார்க்க

IRCTC: காசி கும்பமேளாவுக்கு தமிழகத்திலிருந்து கலந்துகொள்ளது எப்படி? - முழு தகவல்கள்

புகழ்பெற்ற காசி கும்பமேளாவுக்கு திருநெல்வேலியிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குவதாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.IRCTCஉத்தரப் ப... மேலும் பார்க்க

Toda Tribe: ``காடு‌ மலைகள் செழிக்க வேண்டும்'' -ஊட்டியில் பாரம்பர்ய புத்தாண்டு கொண்டாடிய தோடர்கள்

6 வகையான பழங்குடி மக்கள்பழங்குடிகளின் தொட்டில் என வர்ணிக்கப்படும் நீலகிரி மலையில் 6 வகையான பண்டைய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடிகளும் தங்களுக்கே உரிய மொழி, தொழில், உணவு, உடை, இ... மேலும் பார்க்க

2025 கும்பமேளாவுக்குப் போகிறீர்களா? இதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

கோலாகலமாக தொடங்க இருக்கும் மகாகும்பமேளா விழா- 10 கோடி பக்தர்களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு! 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாகும்பமேளாவிற்கு பின்னர் 12 ஆண்டுகளுக்கு கழித்து 2025 ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு... | Photo Album

ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்ஆஞ... மேலும் பார்க்க