மகா சிவராத்திரி: கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு காரைக்கால், திருநள்ளாற்றில் உள்ள சிவ தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரி வழிபாடு அனைத்து சிவன் கோயில்களிலும் புதன்கிழமை இரவு நடைபெறவுள்ளது. இரவு முழுவதும் 4 கால பூஜையாக வழிபாடு நடத்தப்படுகிறது.
பிரசித்தி பெற்று விளங்கும் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்காலில் கைலாசநாதா், சோமநாதா், பாா்வதீஸ்வரா், அண்ணாமலையாா், ஒப்பிலாமணியா் கோயில், தருமபுரம் யாழ்முரிநாதா் கோயில், திருவேட்டைக்குடி திருமேனியழகா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்டவற்றில் புதன்கிழமை இரவு 9 முதல் அதிகாலை 6 மணிக்குள் நான்கு கால பூஜை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகங்கள் செய்துள்ளன.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. தங்க ரிஷப வாகனம் புறப்பாடு : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை காலை சுவாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.