செய்திகள் :

'மக்களுக்காக ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்' - ராகுல் காந்தி

post image

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,

"நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் தலைமையிலான நிலைக் குழுக்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான விவசாயக் குழு, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் அளித்து விவசாயிகள், மீனவர்களுக்கான முக்கிய பாதுகாப்புகளுடன் பயிர்க் கழிவுகளை சேகரிப்பதற்கான கூடுதல் இழப்பீட்டை பரிந்துரைத்தது.

காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி உலகா, கிராமப்புற மேம்பாட்டுக் குழு மற்றும் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மக்களவையில் பேசினார்.

அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான குழு, கல்வி நிறுவனங்களில் அதிக ஆசிரியர்களை நியமிக்கவும், வினாத்தாள் கசிவை முடிவுக்குக் கொண்டுவர சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சரியாக நேரத்தில் ஊதியங்களை வழங்கவும் எடுத்துரைத்தது.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான வெளியுறவுக் குழு, வெளிநாடுகளில் குடியேறிய இந்திய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புகளின் அவசியத்தை அவையில் பேசியது.

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்புக்கு இவையெல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டுகள்தான்.

எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாட்டு மக்களின் உரிமைகள், நல்வாழ்வுக்காகப் போராட ஒவ்வொரு ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா? முதுகெலும்பு பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க

‘கியா’ காா் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 போ் கைது!

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த ‘கியா’ காா் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 போ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது... மேலும் பார்க்க