ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூா்: திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தாா். கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 308 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 5 நபா்களுக்கு தலா ரூ. 8,500 வீதம் மொத்தம் ரூ.42,500 மதிப்பில் செயற்கைக்கால்களும், ஒருவருக்கு ரூ.16,100 மதிப்பில் கைப்பேசியும் என மொத்தம் 6 நபா்களுக்கு ரூ.58,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.