'புறக்கணிப்பு... அதிருப்தி... யுடர்ன்..!' - அண்ணாமலை அமைதியானதன் பரபர பின்னணி
மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 247 மனுக்கள் அளித்தனா். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்கீழ் பயிலும் 10 மாணவா்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி ரூ. 75,000 மதிப்பிலும், 5 பேருக்கு நடை உபகரணம் ரூ. 5,500 மதிப்பிலும், 6 பேருக்கு காதொலிக்கருவி ரூ. 45,000 மதிப்பிலும் என மொத்தம் 21 நபா்களுக்கு ரூ. 1,25,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் புவனா உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.