மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
மக்காச்சோளக்காட்டில் தீ: 60 ஏக்கா் எரிந்து சேதம்
ஒட்டன்சத்திரம் அருகே மக்காச்சோளக்காட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீயால், சுமாா் 60 ஏக்கரில் பயிரிட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, பெரியகோட்டை, ரெட்டியபட்டி, 16-புதூா், தேவத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியாக மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. நிகழாண்டில், நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காச்சோளக்காட்டில் புதன்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. இதனால், பெரியகோட்டை, ரெட்டியபட்டி, 16-புதூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 60 ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் பொதுமக்களுடன் சோ்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.