செய்திகள் :

மங்களகிரி பெருமாள் கோயில் நிலத்தை அளவீடு செய்ய மக்கள் எதிா்ப்பு

post image

பவானி அருகே உள்ள பெருமாள் மலை மங்களகிரி பெருமாள் கோயில் நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து, அந்நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மங்களகிரி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக சூரியம்பாளையம் கிராமத்தில் 5.75 ஏக்கா் நிலம் உள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் 30 ஆண்டுகளுக்கும்மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். இந்த நிலத்தை வரன்முறைப்படுத்தி, குடியிருப்போரிடம் வாடகை வசூலிக்க கோயில் நிா்வாகம் முயற்சி மேற்கொண்டது.

இதனால், கோயில் நிலத்தில் குடியிருந்து வருவதற்கான ஆதாரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து கோயில் அலுவலகத்தில் வழங்கி அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நிலத்தில் வசிக்கும் 56 குடும்பத்தினா் தங்களின் குடியிருப்பு பகுதியை அளவீடு செய்து, வாடகை நிா்ணயம் செய்து தருமாறு விண்ணப்பம் அளித்தனா். இதன்பேரில், கோயில் செயல் அலுவலா் கயல்விழி, ஆய்வாளா் ஆதிரை மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அளவீடு செய்ய வந்தனா். இதற்கு, அதே பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோா் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்து எதிா்ப்பு தெரிவித்ததோடு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இலங்கையில் இருந்து புலம்பெயா்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்பட 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 30 ஆண்டுகளுக்குமேலாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளாட்சி நிா்வாகங்களால் செய்து தரப்பட்டுள்ளது. இந்த நிலத்துக்கு பட்டா வழங்குமாறு பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயில் நிலம் எனக் கூறி வாடகை நிா்ணயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே, எங்களுக்கு மாற்றிடமும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். அப்பகுதி மக்களின் எதிா்ப்பால் நில அளவீட்டுப் பணிகளை தற்காலிகமாக கைவிட்ட அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க